Advertisement

சிறப்புச்செய்திகள்

'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய்

18 ஜன, 2026 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Biggest-reasons-why-Vivek-Oberoi-left-the-industry,-says-his-former-fitness-trainer
Advertisement


பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் அறிமுகமான 'கம்பெனி' என்கிற முதல் படத்திலேயே வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் சாக்லேட் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் வெகு வேகமாக வளர்ந்தார். ஆனால் 2015க்கு பிறகு அவர் படங்களில் நடிக்கும் எண்ணிக்கை குறைந்தது.

அந்த வகையில் கடந்த பத்து வருடங்களில் வெறும் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் விவேக் ஓபராய். படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஒரு தொழிலதிபராக தனது புதிய பயணத்தை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகிறார் விவேக் ஓபராய். படங்களில் நடிப்பதை குறைப்பதற்கு இவர் 2002ல் சந்தித்த மிகப்பெரிய விபத்து தான் காரணம் என்று விவேக் ஓபராயின் ஜிம் பயிற்சியாளராக வினோத் சன்னா என்பவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 2002ல் 'ரோடு' என்கிற படத்தில் விவேக் ஓபராய் நடித்துக் கொண்டிருந்தபோது ராஜஸ்தானில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது பிகாணீரிலிருந்து ஜெய்சல்மருக்கு காரில் இரவு நேரத்தில் பயணித்தார் விவேக் ஓபராய். முன் சீட்டில் அமர்ந்து பயணித்த அவர் இரவு நேரம் என்பதால் வேகம் குறைவாக செல்லுமாறு ஓட்டுநரை பலமுறை எச்சரித்தார். ஆயினும் எதிர்பாராமல் சவுக்கு கட்டைகளை பாரமாக ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற ஒட்டக கூட்டத்தின் மீது இவர் கார் மோதியது.

ஒட்டகத்தின் மீது இருந்த சவுக்கு கட்டைகள் கண்ணாடி வழியாக காரை துளைத்து விவேக் ஓபராய்க்கு மிகப்பெரிய காயங்களை ஏற்படுத்தின. அந்த விபத்து அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது இருந்து இரவு நேர பயணத்தை விவேக் ஓபராய் தவிர்த்து விடுவதுடன் எப்போதுமே முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பதையும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தவிர்த்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : ... மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap