'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் |

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமான சாரா அர்ஜுன், அதன்பிறகு சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். துரந்தர் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றபோது, அந்த மேடையில் சாரா அர்ஜுனும் , நடிகர் ராகேஷ் பேடியும் வணக்கம் தெரிவித்தபடி கட்டிப்பிடித்துக் கொண் டார்கள்.
அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, சாரா அர்ஜுனிடம் ராகேஷ் பேடி தவறாக நடந்து கொண்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நேரத்தில் அது குறித்து நடிகர் ராகேஷ் பேடி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், துரந்தர் படத்தில் சாரா அர்ஜுனின் தந்தையாக நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு தளத்தில் எப்போது என்னை சந்தித்தாலும் இதுபோன்று ஹக் செய்துதான் அவர் வணக்கம் சொல்வார். அதேபோன்றுதான் அப்படத்தின் வெற்றி விழா மேடையிலும் செய்தார். எங்களுக்கிடையே இருப்பது அப்பா - மகள் உறவு தான். அதனால் இதை ரசிகர்கள் தவறான கோணத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.