அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் தற்போது பேட்டில் ஆப் கல்வான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அபூர்வா லகியா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை லடாக்கில் உள்ள லே நகரத்தில் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லே பகுதியில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் படத்தின் ஹீரோவான சல்மான்கானுக்கே அவரது மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி வெளியான விவரங்களின்படி, சல்மான்கானுக்கு பல்வேறு விதமான கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் அவ்வப்போது இருந்து வருகின்றன. இதுகுறித்து அவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அவரே தனக்கென 15 பேர் கொண்ட தனி பாதுகாப்பு படை ஒன்றை உடன் வைத்துள்ளார். லே படப்பிடிப்பின் போது அரசு தரப்பில் இருந்தும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாகவே படக்குழுவினரிடம் இருந்து மொபைல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் வாங்கி வைக்கப்பட்டன. இதற்கு படத்தின் ஹீரோ சல்மான் கான், படத்தின் இயக்குனர் அபூர்வா லகியாவும் விதிவிலக்கல்ல. அவர்களது மொபைல் போன்களும் இதே போல அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனவாம்.
காரணம் சல்மான்கானின் மொபைல் போனை வைத்து அவரது இருப்பிடத்தை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம். இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறும்போது இதுவரை மிக மிக முக்கியமான அரசியல்வாதிக்கு கூட இந்த அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது இல்லை என்று சொல்லப்படுகிறதாம்.