பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதின் ஒரு பகுதியாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளை (ஆப்) அரசு தடை செய்தது.
இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர், நடிகையும் விசாரித்து வருகிறார்கள். சூதாட்ட பணத்தில் அவர்கள் சம்பளம் பெற்றிருந்தால் அதுவும் குற்றமாகும் என்கிற அடிப்படையில் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அந்த வகையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா, மேற்கு வங்க நடிகை மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.15) விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரத்தேலா தமிழில் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.