அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். தனக்கு மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லும் தைரியம் கொண்ட கங்கனா திரைப்படங்களிலும் அதுபோன்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'எமர்ஜென்சி' படத்தில் மறைந்த பிரதமர் இந்திராவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா. இந்த படத்தை அவரே இயக்கியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படம் தயாரிப்பில் இருந்த நிலையில் பொருளாதார பிரச்னை, படத்தை திரையிட கூடாது என எழுந்த எதிர்ப்பு, சென்சார் கெடுபிடி என அனைத்தையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலும் மிதமான வேகத்தில் தான் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் பற்றி கங்கனா சமீபத்தில் கூறும்போது, "ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்கள் இந்த படத்திற்காக பணம் போடுவதை நிறுத்திக் கொண்டனர். உதவுவதாக சொன்ன ஓடிடி நிறுவனங்கள் கூட ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டன. வேறு வழியின்றி எனது வீட்டை அடமானம் வைத்து இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக 'மணிகர்ணிகா' என்கிற வரலாற்று படத்தை இயக்கிய கங்கனா, இரண்டாவது முறையாக இயக்கியுள்ள படம் தான் இந்த எமர்ஜென்சி என்பது குறிப்பிடத்தக்கது.