10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையிலும், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே விக்ரம் ரூ.20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், மோகன்லால் ரூ.3 கோடி, அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம், சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து ரூ.1 கோடி, பிரபாஸ் ரூ.2 கோடி, தனுஷ் ரூ.25 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் தற்போது நடிகர் பிரித்விராஜ், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.