தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்து சாதனை படைத்த முரளிகாந்த் பெட்கரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஹிந்தியில் உருவாகி உள்ள படம் ‛சந்து சாம்பியன்'. அவரது வேடத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்க, கபீர் கான் இயக்கி உள்ளார். ஜூன் 14ல் படம் ரிலீஸாகிறது. கார்த்திக் ஆர்யன் அளித்த பேட்டி :
உங்கள் கேரியரின் முதல் வாழ்க்கை வரலாற்று படம், அதுபற்றி உங்கள் கருத்து?
முரளிகாந்த் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தப்படம் வாயிலாக இனி நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முரளிகாந்த் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவை உலக அளவில் கொண்டு செல்லும் படம் இது. இந்த படம் அனைவரையும் ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும். இந்த பயணம் எனக்கு எளிதாக அமையவில்லை. இரண்டு வருடங்களுக்கும் மேலாக எனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்துள்ளேன். படப்பிடிப்பின் போது கிட்டத்தட்ட நான் ரோபோவாக இருந்தேன். படப்பிடிப்பின் போது, எனக்கும் வெளியுலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போன்று இருந்தேன்.
கபீர் கானுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
கபீர் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி, நிறைய கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க துவங்கும் போது சுவீட் சாப்பிடவே கூடாது என்று கபீர் கூறிவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் படப்பிடிப்பு முடிந்ததும் அவரே எனக்கு சுவீட் ஊட்டிவிட்டார். கபீர் உடன் பணிபுரிந்த பின் என் வாழ்க்கையும் மாறி உள்ளது. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வாழ்ந்ததைப் போலவே இப்போது எனது தினசரி வழக்கத்தையும் செய்துள்ளேன். இப்போது நான் தினமும் ஜிம்முக்கு செல்கிறேன். சரியாக உணவு எடுத்துக் கொள்கிறேன். தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன்.
உங்களை ரசிகர்கள் சோனு என்று அழைக்கிறார்கள், இந்தப் படத்திற்குப் பிறகு சந்து என்று அழைப்பார்களா?
அப்படி நடக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு என்னுடைய கதாபாத்திரம் நிச்சயம் ஞாபகம் வரும். என்னுடைய இந்த கதாபாத்திரம் எனது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பரிசாக இருக்கும். ஏனென்றால் நான் இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்றும், என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் பார்க்க வேண்டும் என்றும் எனது ரசிகர்கள் நிறைய பேர் விரும்புவதாக உணர்கிறேன்.