அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஜவான்' படத்தை, கவுரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. தற்போது இந்த படம் 2024ம் ஆண்டுக்கான 'ஆஸ்ட்ரா விருது' விழாவில் திரையிட இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரா விருது ஆஸ்திரேலியாவில் உள்ள டெலிவிஷன் அசோசியேஷனால் வழங்கப்படுவதாகும். உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆப் எ பால் (பிரான்ஸ்), கான்க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), பாலன் லீவ்ஸ் (பின்லாந்து) பெர்பெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட் ஆப் திங்ஸ் (பிரான்ஸ்), தி டீச்சர்ஸ் லவுஞ்ச் (ஜெர்மனி) மற்றும் தி சோன் ஆப் இன்ரஸ்ட் (யுனைடெட் கிங்டம்) போன்ற படங்களுடன் கலந்துகொண்ட ஒரே இந்தியப்படம் 'ஜவான்'.
இந்த நிகழ்வில் இயக்குநர் அட்லீ இந்தியா நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஜவான் படம் உலகளவில் பிரபலமான பார்பி, ஓப்பன்ஹெய்மர், கில்லர் ஆப் தி ப்ளவர் மூன், ஜான் விக், ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் மற்றும் பல பாக்ஸ் ஆபிஸ் பட்டியலிலும் இணைந்துள்ளது.