2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற தாரே ஜமீன் பார் படத்தின் இரண்டாம் பாகமாக சித்தாரே ஜமீன் பார் என்கிற படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் ஆமீர்கான். ஆனால் கொஞ்ச காலத்திற்கு அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார். காரணம் அவரது அம்மாவின் உடல்நிலை தான். அவரது அம்மா ஜீனத் ஹுசைன் கடந்த வருடம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தனது தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு சென்னைக்கே தனது இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்துள்ளார் ஆமீர்கான். இதற்காக சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது தாயின் உடல் நிலையை பராமரிக்க சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கிறேன் என்று ஆமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.