''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக தி வேக்ஸின் வார் என்கிற படத்தை இயக்கினார் விவேக் அக்னிஹோத்ரி. இந்தியா நடத்திய ஒரு யுத்தத்தில் நடைபெற்ற அறியப்படாத சில நிகழ்வுகளும், அந்த யுத்தத்தில் எப்படி அறிவியல்பூர்வமாக தைரியமாக மிகப்பெரிய வெற்றியை இந்தியா பெற்றது என்பது பற்றியும் இந்த படத்தில் அவர் கூறியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியான இந்த படம் வெளியான நாளிலிருந்து எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் இப்போது வரை வெறும் எட்டு கோடி என்கிற அளவிலேயே வசூலித்து மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் அவரது இரண்டாவது படம் இன்னும் பத்து கோடியை கூட தொடுவதற்கு திணறுகிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான்.