‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா | அபிஷேக் பச்சன் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்படுத்திய குழப்பம் ; தெளிவுபடுத்திய நிறுவனம் | காவாலா பாடலுக்கு என் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை ; தமன்னா வருத்தம் | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் என்ட்ரி கொடுக்கும் சாய் ரித்து | மாற்றி மாற்றி பேசும் கோபி : கடுப்பான ரசிகர்கள் | ஆர்மி என்கிற பெயரை பயன்படுத்தியதால் அல்லு அர்ஜுன் மீது புகார் | உலக சினிமாவில் ஒரே நபர் என்கிற சாதனையை இழந்து விட்டாரே விஜய் ; ரசிகர்கள் வருத்தம் | ஜோவிகாவை நடிகையாக்க நினைக்கல - வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக் |
'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைப் அலிகானின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் பைரா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.