25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் | என் பெயரை பயன்படுத்த விரும்பாத தம்பி ; பிரியா வாரியர் வருத்தம் கலந்த பெருமிதம் | பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | தனுசுக்கு பொங்கியது ஏன்? அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? | பேண்டசி படத்தில் தர்ஷன் |
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம் மிகப்பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த புதிய பார்லி., கட்டடத்தின் அழகை விவரிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‛நம்முடைய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் மக்களுக்கு ஒரு அற்புதமான புதிய வீடு. இது இந்த மகத்தான தேசத்தில் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி பன்முகத்தன்மையை பாதுகாக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்றாலும் இந்தியாவின் மகிமை என்கிற பழைய கனவை சுமந்து கொண்டிருக்கிறது. ஜெய்ஹிந்த்' என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடம் ஜனநாயக வலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக அமைந்திருக்கிறது. இதில் நம்முடைய பாரம்பரியம் மட்டுமின்றி நவீனமும் கலந்து இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.