மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜூனியர் என்டிர் அடுத்ததாக பிரபல முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஜனதா கேரேஜ் என்கிற படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது..
இதில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் சைப் அலிகானுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் வில்லனாக நடிக்கவில்லை என்று கூறி, இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் சைப் அலிகான். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்கின்றனர் படக் குழுவினர் வட்டாரத்தில். தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆதிபுருஷ் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் வில்லனாக சைப் அலிகான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.