திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
2013ம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ஹிந்தி படம் ராஞ்சனா. இதில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இரண்டாவது நாயகியாக ஸ்வரா பாஸ்கர் நடித்தார். ஹிந்தி படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். அதோடு அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரான பகத் அகமது என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார் ஸ்வரா பாஸ்கர். இவர் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். அவர்களின் திருமணம் எளிமையான முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற்றுள்ளது. அதோடு விரைவில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
நடிகை ஸ்வரா பாஸ்கர் - பகத் அஹமதுவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.