பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! |

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஜோடி மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்து வரும் படம் பதான். இசித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பேஷ்ரங் என்கிற பாடல் வெளியானது. ஆனால் வெளியான அன்றே மிகப் பெரிய சர்ச்சையையும் கிளப்பியது.
இந்த பாடலில் கவர்ச்சிகரமான நடனமாடியுள்ள தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருந்தது இந்துமத உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்தது. இது குறித்து தங்களது எதிர்ப்புகளை பலரும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில மாநிலங்களில் இந்த படத்தை திரையிட கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வரும் ஜனவரி 23ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு இந்தப்படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் பேஷ்ரங் பாடலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை எந்த காட்சிகள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் பதான் குழுவினர் தாங்கள் விரும்பி எடுத்த அந்த பாடலை திரையிடுவதற்கு சிக்கல் எழுந்துள்ளது.