திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
பிரபல நடிகை சோனம் கபூர் வீட்டில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார் சோனம் கபூர் .
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சோனம் கபூரின் வீட்டில் நர்சாக பணிபுரியும் அபர்னா ருது வில்சன் ( வயது 31) என்ற பெண் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சோனம் கபூரின் மாமியாரின் உடல்நிலையை கவனிப்பதற்காக நர்சஸ் அபர்னா பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர், சோனம் கபூரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு நர்சின் கணவர் நரேஷ் குமார் சாஹர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து, நடிகை சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடித்த நர்ஸ், கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நர்சிடம் இருந்து கொள்ளையடித்த நகை, பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.