''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
டாப்சி தடகள வீராங்கணையாக நடித்த ராஷ்மி ராக்கெட் படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் சபாஷ் மிது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம்.
இதனை வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தை முதலில் இயக்கி வந்தவர் ராகுல் டோலக்யா. அவர் இப்படத்திலிருந்து விலகவே ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கெரோனா பரவல் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதாலும், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடித்து விட்டனர்.
டாப்ஸி கூறுகையில், ‛‛எனக்கு 8 வயது இருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் ஆண்களுக்கான விளையாட்டாக இருக்காது, நமக்கென்று ஒரு அணியும், ஒரு அடையாளமும் கூட கிடைக்கும் என்று ஒருவர் என்னிடம் கூறினார். அது இப்போது நடத்திருக்கிறது. நாங்கள் விரைவில் வருகிறோம். சபாஷ் மிதுபடப்பிடிப்பு நிறைவடைந்தது. 2022 உலகக் கோப்பை ஆட்டத்தை கொண்டாட தயாராவோம்'' என்று பதிவிட்டுள்ளார்.