தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 |
நோய் தொற்று காரணமாக ஊரே முடங்கியிருக்கும் இக்காலக்கட்டத்தில் வெளியே செல்லாமல் நேரத்தை கழிக்க அனைவராலும் ஓ.டி.டி. தளம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமின்றி பல டி.வி. நிகழ்ச்சிகளையும், குறும்படங்களையும் அள்ளித்தருகிறது இத்தளம்.
இதில் சிக்கல் என்னவென்னறால் தணிக்கை செய்யப்படாமல் ஒளிபரப்பபடுகிறது. இதனால் நேரடியாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாக உள்ளது. முறையற்ற காட்சிகளால் சமூக கலாச்சரம் மட்டுமின்றி மக்கள் மனமும் சீரழிய ஏதுவாகிறது என்கின்றனர் நிபுணர்கள். ஒரு பக்கம் முழு திரைப்படத்தை தயாரிக்க போதுமான பணம் இல்லாத ஏராளமான கலைஞர்களுக்கு ஓ.டி.டி.தளம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் ஆபாசம் இதன் மற்றொரு பக்கம்.
தணிக்கைக்கு ஆதரவு
சமீபத்தில் பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் மற்றும் ஆபாச காட்சிகளுக்காக மஹாராஷ்டிரா சைபர் கிரமை் போலீசார் ஏ.எல்.ஏ. டி.பாலாஜி ஹாட் ஷாட் , ஹாட் மல்டி , சிக்கூ, ப்ளிக்ஸ் மற்றும் ப்ளிஸ்மூவிஸ் போன்ற தளங்கள் மீது வழக்கு பதிந்தனர். இத்தகைய தளங்களை தணிக்கை செய்வது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சுய ஒழுங்குமுறை கடைபிடிக்குமாறு ஓ.டி.டி. தளங்களை அறிவுறுத்தினார். அதுபயனளிக்காத நிலையில் நவம்பரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சக வரம்புக்குள் அனைத்து ஓ.டி.டி. தளங்களையும் கொண்டு வந்து உத்தரவிட்டார். இது தொடர்பாக இணையதள ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவம் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில் 57 சதவீதம் பேர் தணிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
குற்றம் அதிகரிக்கும்
முன்னாள் டி.ஜி.பி., திலகவதி கூறுகையில், ஓ.டி.டி., தளங்கள் ஆபாசபடங்களை நமது நடு அறைக்கே கொண்டு வந்துள்ளன. டி.வி., நிகழ்ச்சிகளை கூட இப்போது தணிக்கை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.அதைவிட ஏராளமான ஆபாசங்களை கொண்ட ஓ.டி.டி., தளங்கள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியது கட்டாயம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் தவறான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஓளிபரப்புவதால் ஆபாசங்களும், ஒழுங்கீனங்களும் இயல்பானதாக கருதப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் தான் வழ்க்கை முறை என்ற நினைப்பதால் மக்கள் குற்றம் செய்ய தயங்குவதில்லை. குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றி தவறான கருத்து ஏற்படுகிறது. தவறான முன் மாதிரிகளை பின்பற்றத் தொடங்குகின்றனர் என்றார்.
சட்டத்தில் ஓட்டை
சைபர் குற்றங்கள் வழக்கறிஞர் சுந்தரகாடேஸ்வர் கூறுகயைில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், ஓ.டி.டி.தளங்களில் ஆபாசங்களை திணிக்க முக்கிய காரணம் . உதாரணமாக உடல் முன்பகுதியை நிர்வாணமாக காட்டக்கூடாது என்று மட்டுமே சட்டம் தடை செய்துள்ளது. அதனால் பின்பக்க நிர்வாண கோலத்தை வயது வந்தோருக்கு மட்டும் என்ற முத்திரையுடன் ஒளிபரப்ப முற்படுகின்றனர். நிர்வாண காட்சிகளுக்கு முற்றிலுமாக தடை விதித்து சட்டத்தின் தவறே பெண்களை அநாகரிமாக சித்தரித்தல் தடை சட்டத்தில் (ஐ.ஆர்.டபிள்யு.) திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்றார்.
அபாயகரமாக விளைவு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக சேவை செய்யும் அறம், அறக்கட்டளையின் அறங்காவலர் மாதவன் கூறுகையில், கொரோனாவுக்கு பின் இணையத்தின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓ.டி.டி., இயங்கு தளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வரும் போது திரைப்படங்களை பார்க்க குடும்பங்கள் சேனலை மாற்றிவிடுவர். ஆனால் இப்போது எல்லாம் இயல்பானதாகவே கருதப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடு மெதுவாக குடும்ப கட்டமைப்பை நாசப்படுத்துகிறது. இப்போது ஒவ்வொரு வரும் ஒரு கேஜெட் வைத்துள்ளனர். இது நிச்சயமாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனதில் ஒரு எதிர்மறையைான தாக்கத்தை ஏற்படுத்தும். விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும் என்றார்.
மனநலம் பாதிக்கும்
மனநல மருத்துவர் பரந்தாமன் கூறுகையில், இளம் பருவத்தினரை தேவையற்ற பொருத்தமற்ற கருத்துக்களின் பால் இழுத்து விடுவது அவர்களின் ஆன்மாவை சேதப்படுத்தும் , தீவிர மனநல பிரச்னைக்கும் வழிவகுக்கும் என்றார்.
யூ-டியூப் கண்காணிப்பும் அவசியம்.
ஓ.டி.டி.,யை போல் யூ-டியூப் ஐ ஒழுங்குபடுத்துவதும் மிகவும் அவசியம். ஏனெனில் இந்த செயலி இலவசமாக கிடைக்கிறது. கோடிக்கணக்கான கணக்காளர்களால் அணுகப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் யூ-டியூப் வய வந்தோர் நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவதில்லை. அத்தனை கருத்துகளும் கணக்காளர்களால் தேடப்படுவை நாங்கள் எதையும் திணிப்பதில்லை என யூ-டி.யூப் கூறுகிறது.
வழக்கறிஞர் சுந்தரகாடேஸ்வரன் கூறுகையில், சாதாரணமாக அலைபேசி பயன்படுத்தாக நிலையில் இருந்தாலும் கூகுள் நமது குரலைபதி செய்ய இயலும் . நெருக்கமான உரையாடலை கூட யூ.-டி.யூப் பதிவு செய்து அதற்கேற்றவாறு அபாச படங்களை ஒளிபரப்பக்கூடும்.
இதை குழந்தைகள் அணுக வாய்ப்புள்ளது. இந்த அம்சத்திற்காக நீதிமன்றத்தில் யூ.டி.யூப் மேல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றார்.
பார்வையாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் பெற முன்னணி ஓ.டி.டி., தள நிறுவனங்களை பல முறை அணுகிய போதும் அவர்கள் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை.