லக்கி பாஸ்கர் இயக்குனருடன் சூர்யா கூட்டணி | அல்லு அர்ஜுன் விவகாரம் : களமிறங்கிய தில் ராஜு | பிளாஷ்பேக் : அப்பா சிவகுமார் அடிவாங்குவதை பார்த்து கதறி துடித்த கார்த்தி | ஜனவரி 27 முதல் சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்! - நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட தகவல் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த 'ஸ்பூப்' கதை | பாலிவுட் பாடகர் முகமது ரபியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லி! | தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னட சினிமாவுக்கு வர வேண்டும் : கிச்சா சுதீப் அழைப்பு | தெறி படத்தை விட வசூலில் பின்தங்கிய பேபி ஜான்! | வாரணாசியில் சாய் பல்லவி சாமி தரிசனம் |
கண்ணசைவில் ஒரு கவிதையாய், அழகால் ஆடவர் நெஞ்சத்து அற்புதமாய் இடம் பிடித்த 'காதல் கசக்குதய்யா' படத்தின் கதாநாயகி வெண்பா நம்முடன் பகிர்ந்து கொண்டது...
வெண்பா இயற்பெயர் தான். பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கி பயணித்து கொண்டிருக்கிறேன். கல்லுாரிக்கு சென்று படிக்க வாய்ப்புகள் ஏற்படாததால் தற்போது வழக்கறிஞராக தொலை துாரக் கல்வியில் பயில்கிறேன். குழந்தை நட்சத்திரமாக 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலிக்கு ஜூனியராக நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. கதாநாயகியாக முதன் முதலில் நடித்த 'காதல் கசக்குதய்யா' படம் வெளியாகி 7 ஆண்டுகளை கடந்தும் அது தான் இன்று வரை எனக்கான அடையாளமாக உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக 15 படங்கள், நடிகையாக 10 படங்கள் என 25 படங்கள் நடித்துள்ளேன். ஒரு படத்தில் நன்றாக பேசும் கதாபாத்திரம், மற்றொரு படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரம் என தேர்வு செய்து நடிக்கிறேன். மாயநதி படத்தில் முழு கதையையும் சுமக்கும் கதாபாத்திரத்தில் நடித்தது நல்ல அனுபவம். குழந்தை கதாபாத்திரத்தில் முதல் முறையாக 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில் தங்கர் பச்சான் மகளாக நடித்தேன். அன்று முதல் எல்லா படங்களிலும் எனக்கான டப்பிங் நானே பேசி வருகிறேன்.
உடல் நிலை சரியில்லாத போது நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அகத்தின் அழகை முகம் காட்டி கொடுத்து விடும். ஆனால் கேமரா முன் நின்று 'ஆக் ஷன்' என கூறியதும் புத்துணர்ச்சியோடு நடிக்கும் பணி துவங்கிவிடும். இது போன்று பல நேரங்களில் நடந்துள்ளது. தற்போது 'அஸ்திரம்' படத்தில் 'நடிகையாக' நடித்துள்ளேன்; விரைவில் வெளியாகவுள்ளது. மூன்று படங்கள், சில வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறேன். வேலை என வந்து விட்டால் சரியான நேரத்தை கடைபிடித்து, முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் நமக்கான வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
வெற்றிமாறன் திரைப்படத்திலும், வரலாற்று சிறப்பு மிக்க படங்களிலும் நடிக்க விருப்பம் உள்ளது. யதார்த்தம், அழுத்தமான கதாபாத்திரங்களில் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஒவ்வொரு முறையும் கதை கேட்கும் போதும் என்னால் நன்றாக நடிக்க முடியும் என்றால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். நடிக்க முடியாத பட்சத்தில் வேண்டாம் என தீர்க்கமாக கூறிவிடுவேன். அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறது. நடனகலைஞராக இருந்தும் இதுவரை சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
மனம், உடல் இரண்டையும் பேணுவதற்கு தினமும் உடற்பயிற்சிகள் செய்வது வழக்கம். காதல் கசக்குதய்யா படத்தில் நடித்த போது இருந்ததை போலவே தற்போதும் இருக்கிறீர்கள் என பலரும் கூறுகின்றனர். சரிவிகிதத்தில் உணவு உட்கொள்வது சரியானதாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பெற்றோர் கூறவும் இல்லை, எனக்கும் எவ்வித எண்ணமும் ஏற்படவில்லை. வருங்கால கணவர் தொழில், குடும்பம் இரண்டையும் கையாளுவதில் திறமையானவராக இருக்க ஆசை உள்ளது.
சினிமாவில் பொறுமை முக்கியம். ஒரு நேரத்தில் ஏற்றம், மற்றொரு நேரத்தில் இறக்கம் என மாறி மாறி அமையும் என்பதால் அதை தாங்கக்கூடிய மனஉறுதி வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து போராடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.