ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
என்னதான் மற்றவர்கள் உதவி மூலம் வெற்றி பெற்று உயரத்திற்கு சென்றாலும், சொந்த காலில் நின்று வெற்றி பெறுவது தனி சாமர்த்தியம் தான். அப்படிப்பட்டவர் தான் சென்னையை சேர்ந்த வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களில் நடித்து 'பிஸி'யாக வலம் வரும் பாடினி குமார். ஹார்டு ஒர்க், ஸ்மார்ட் ஒர்க் என இரண்டும் இருந்தால் வாழ்வின் எந்த உயரத்தையும் அடையலாம் என 'கியூட்டாக' கூறும் இவர், தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்ததாவது:
என் அப்பாவிற்கு, சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை. பல இயக்குநர்களின் ஆடிஷன்களில் பங்கேற்றார். வாய்ப்புகள் கைகூடவில்லை. பல ஆண்டுகளை கடந்தபோதிலும் என் அப்பாவிற்கு சினிமா ஆசை தீரவில்லை. நான் சிறுவயதிலிருக்கும் போதே எனக்கு சினிமா பற்றி சொல்லிக் கொடுப்பார். அதன்மூலம் எனக்கும் ஆர்வம் வரத்தொடங்கியது.
வீட்டில், சினிமாவில் நடிக்க வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்து என கூறினர். கல்லுாரி படிப்பு முடிந்து 2019ல் மத்திய அரசில் வேலை கிடைத்தது. 9 மாதம் தான் வேலை செய்தேன். கொரோனா காலம் வந்தது. சினிமா ஆசை என்னை துாங்க விடவில்லை. வேலையை விட்டு விட்டு நடிக்க விரும்புகிறேன்; உங்கள் விருப்பம் என்ன என பெற்றோரிடம் கேட்டேன். அவர்கள் ஒப்புகொள்ளவில்லை. அடம்பிடித்து சம்மதம் வாங்கினேன். ஓராண்டு அவகாசத்தில் உன்னை நிரூபிக்கவில்லை என்றால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள். அதற்கு நான் சம்மதித்து என் சினிமா பயணத்தை தொடங்கினேன்.
அப்பாவிற்கு பல இயக்குநர்களை தெரியும் என்றாலும் அவர்கள் மூலம் சினிமாவில் நுழைவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. என் சொந்த காலில் நின்று ஜெயிக்க விரும்பினேன். ஒவ்வொரு ஆடிஷன்களிலும் பங்கேற்றேன். 'டிக்டாக்' செயலியிலும் வீடியோ பதிவேற்றம் செய்தேன். எனக்கு தெரிந்த உதவி இயக்குநர் மூலமாக 'நாயகி 2', 'திருமணம்' சீரியல்களில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. 2021ல் கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கினேன். எனக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம்.
உறவினர்கள், பெற்றோர் என்னை நடிப்பை விட்டு வேலைக்கு போய்விடு என்றனர். அதை பொருட்படுத்தாமல் விடாமுயற்சி செய்தேன். 2021ல் 'டேக் டைவர்சன்' திரைப்படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. அந்தபடம் என்னை மக்கள் மத்தியில் அடையாளம் காண்பிக்கவில்லை. பிறகு ஒரு வெப்சீரிசில் ஒரு பாகத்தில் நடித்தேன். ஆனால் வெப்சீரிஸ் வெளியான போது நான் நடித்த பாகத்தை நீக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை நடிக்க வைத்து வெளியிட்டனர். இது என் வாழ்வில் மறக்க முடியாத புறக்கணிப்பாக இருந்தது.
இந்த புறக்கணிப்பை என் திருப்பு முனையாக கருதி வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்போது 'கன்னத்தில் முத்தமிட்டாள்' சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. நல்ல முறையில் நடித்து மக்கள் மத்தியில் நிரூபித்தேன். பின் 2 திரைப்படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி நடித்து முடித்தேன். அது இன்னும் வெளியாகவில்லை.
'ஹாட்பீட்' வெப்சீரிசில் என் நடிப்பை பார்த்து அப்பா ஒரு நாள் இரவு 12:00 மணிக்கு என்னை தொடர்பு கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறாய். இன்னும் ஜெயிக்க வேண்டும் என பாராட்டினார். யாரெல்லாம் என்னை புறக்கணித்தார்களோ அவர்கள் என்னை தேடி வரும்படி ஒரு காலம் உருவாகும்.
ஹார்டு ஒர்க், ஸ்மார்ட் ஒர்க் செய்பவர்களை எப்போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது. என் ஸ்பெஷலாக என் சுருள் முடியை கருதுகிறேன். அதனால் வாய்ப்புகளும் வருகிறது. நிராகரிப்புகளும் வருகிறது. இன்பம், துன்பம் இரண்டையும் ஏற்பது தான் மனித வாழ்வு என்பதையும் புரிந்து கொண்டுள்ளேன் என்றார்.