Advertisement

அனிருத்

Birthday
16 Oct 1990 (Age )

இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் நடிகர் ரவி ராகவேந்தரின் மகனும், லதா ரஜினிகாந்தின் உறவினரும் ஆவார். 3 படத்தில் இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலைவெறி டி பாடல், யூட்யூப்பில் 80 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பார்க்க செய்து, அனிருத்தை உலக இசை பிரியர்களிடம் பிரபலமடைய செய்தது. பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ள இவர், தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கும் இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். 2011ம் ஆண்டு 3 படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்த அனிருத், தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in