Advertisement

மணிரத்னம்

Birthday
02 Jun 1956 (Age )

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் இயக்குநர் மணிரத்னம். 1956ம் ஆண்டு, ஜூன் 2ம் தேதி, சென்னையில் பிறந்த மணிரத்னம் ஒரு எம்பிஏ., பட்டதாரி. எம்பிஏ., படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், அந்த வேலை பிடிக்காமல் சினிமா பக்கம் வந்தார். கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் போன்றவர்களின் படங்களை பார்த்தும், சிவாஜி, நாகேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு இனி நம் வாழ்க்கை சினிமாவில் தான் என முடிவு செய்தார்.

பல்லவி அனு பல்லவி எனும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம், தமிழில் பகல் நிலவு என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தொடர்ந்து, மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பல ஹீரோக்களை இயக்கியுள்ளார்.

மணிரத்னத்தின் ரோஜா படம் தமிழக மட்டுமல்லாது இந்திய அளவிலும் பேசப்பட்டது. அதன்பின்னர் பம்பாய், உயிரே போன்ற படங்களை தமிழில் மட்டுமல்லாது இந்தியிலும் இயக்கி அங்கு பிரபலமானார்.

இயக்குநராக மட்டுமல்லாது மெட்ராஸ் டாக்கீஸ் எனும் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். இதில் அனேக படங்கள் அவருடையது தான்.

பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 6 முறை தேசிய விருது, மாநில விருதுகள், பல சர்வதேச விருதுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ளார் மணிரத்னம்.

1983ம் ஆண்டு நடிகை சுஹாசினியை, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாதன் என்ற ஒரு மகன் உள்ளார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in