நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் | தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? |

தமிழ் சினிமாவில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின், முக்கியமான படங்களின் தலைப்புகளை டிவி தொடர்களுக்கு பல காலமாய் வைத்து வருகிறார்கள். சினிமாவில் ஒரு தலைப்பை மற்றொருவர் பயன்படுத்த முடியாது. அதற்கனெ இருக்கும் சங்கங்களில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். வருடா வருடம் அவற்றை புதுப்பிக்க வேண்டும் என பல நடைமுறைகள் உள்ளன.
ஆனால், பிரபலமான படங்களின் தலைப்புகளை டிவி தொடர்களுக்கு வைக்க அவை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களோ, அத்தொடர்களை ஒளிபரப்பும் டிவி நிறுவனங்களோ முறையான அனுமதியைப் பெறுவதில்லை. இதுவரையிலும் அதை யாரும் கண்டு கொண்டதுமில்லை.
இந்நிலையில் விஜய் டிவியில் 'விக்ரம் வேதா' என்ற புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. உடனடியாக அப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அத் தொடரின் பெயரை 'மோதலும் காதலும், விக்ரம் வேதாவின் காதல் கதை' என மாற்றிவிட்டார்கள்.
சசிகாந்த் தயாரிப்பில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், மாதவன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டில் வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'விக்ரம் வேதா'.
இனி, யாராவது டிவி தொடர்களுக்கு பிரபலமான திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் அப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் இது போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த தயாரிப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.




