37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

'எதிர்நீச்சல்' தொடரில் அண்மையில் அருண் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சாணக்யன். முன்னதாக ஜீ தமிழின் 'கண்ணத்தில் முத்தமிட்டால்' தொடரில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இவரை பார்க்கும் நேயர்கள் பலரும் இவரை எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? என்று கேள்வி கேட்டு வந்தனர். தற்போது தான் அதற்கான பதில் கிடைத்துள்ளது. சாணக்யன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
சூர்யா- அசீன் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் தான் சாணக்யா குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து மம்முட்டியுடன் 'ஒரு காதல்', அஜித்துடன் 'பரமசிவன்' மற்றும் 'சக்கரவியூகம்' உட்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் 'மெட்டி ஒலி' தான் சாணக்யனுக்கு முதல் சீரியல். இதை நடிகர் சாணக்யனே தனது இன்ஸ்டாவில் வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் 'அந்த சின்ன பையனா இப்படி வளர்ந்துட்டார்?' என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். தவிரவும் சாணக்யன் பிரபல சீரியல் நடிகை கீதா சரஸ்வதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.