தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சின்னத்திரைக்கு வந்தார். விஜய் டிவியின் 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து', 'வைதேகி காத்திருந்தாள்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க ஆரம்பித்த புதிய தொடரான வைதேகி காத்திருந்தாள் ஆரம்பித்த வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. மேலும், அவர் நடித்த அனைத்து சீரியல்களுமே வெவ்வேறு காரணங்களுக்காக விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், சரண்யா தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்து புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஆஹா கல்யாணம் என்ற நிகழ்ச்சியை வீஜே விஜய்யுடன் இணைந்து சரண்யா துராடி தொகுத்து வழங்கவுள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி தொடரில் முதலில் பார்வதியாக நடிக்க வேண்டியவர் சரண்யா தான். ஆனால், விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தால் செம்பருத்தி வாய்ப்பை விட்டுவிட்டார். தற்போது ஜீ தமிழுக்கு வந்திருக்கும் சரண்யா மிக விரைவில் புதிய சீரியலில் கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.