அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு அருமையாக தொகுத்து வழங்கி வருகிறார். ஹவுஸ்மேட்களை கடுமையாக அணுகாமல் ரொம்ப சாப்ட்டாக, ப்ரெண்ட்லியாக நடத்தி வருகிறார். ஆனால், இந்த சீசனின் சர்ச்சை நாயகி அனிதா அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் சிம்புவையே குற்றம் சொல்லி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். முந்தைய சீசனில் நல்ல ப்ளேயர் என பெயரெடுத்த அனிதா, இந்த அல்டிமேட் சீசனில் ஆரம்பம் முதலே தவறான பாதையில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவர் சிம்புவை பற்றி பேசும் போது, 'கமல் சார் அஞ்சு வருஷமா பாக்குறாரு. அவருக்கு எப்படி செய்யணும் என்ன செய்யணும் தெரியும். ஆனால், சிம்பு புதுசு. அதனால அவருக்கு எதுவுமே தெரியல' என விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான சிம்பு, இந்த வார எபிசோடில் பேசிய போது, 'சிம்புன்னா அன்பு. ஆனால் எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு. வம்பு. நான் ஜாலியா இருக்கேன்னு அட்வாண்டேஜ் எடுத்துக்காதீங்க' என எச்சரித்துள்ளார். மேலும், வழக்கமாக ஜாலியாக பேசுவது போல் இல்லாமல் இம்முறை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் தெளிவாக பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.