பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு |

சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, அவர் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களுக்கு பிரபலமானவர். இதனால் அவருக்கு எதிராகவும் சிலர் அடிக்கடி கமெண்ட் அடித்து வந்தனர். இதற்கிடையில் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள அவருக்கு, தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது.
நடிகர் அசோக் குமார் நடிக்கும் புதிய படத்தில் தர்ஷா கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தனது கேரியரில் அடுத்தடுத்த கட்டங்களில் தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் தர்ஷா குப்தா, சமீபத்தில் மீண்டும் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'உன் எதிரிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் உங்கள் மகிழ்ச்சி மிகவும் ஆபத்தான தண்டனை' என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தர்ஷாவின் ரசிகர்கள் அவருடைய புதிய ப்ராஜெக்ட்டுக்காக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தர்ஷா குப்தா, சின்னத்திரையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கான அடையாளத்தை மேலும் அதிகரித்த நிகழ்ச்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.