ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவில் கதைகளம் என்றால் அது சென்னை, பொள்ளாச்சி, தென்காசி, தேனி, மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர் பகுதிகள் தான் பெரும்பாலும் இருக்கும். அதை தாண்டிய கதை களங்களில் படங்கள் வருவது மிகவும் குறைவு. இப்போது கரூரை கதை களமாக கொண்டு கம்பெனி என்ற படம் தயாராகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு ( பாடி பில்டிங்)தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தங்கராஜு இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் தயாரிக்கிறார்.
பசங்க பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக கன்னி மாடம் படத்தில் நடித்த வளினா மற்றும் திரெளதி படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் தங்கராஜ் கூறியதாவது: பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள். அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத பஸ் பாடிபில்டிங் தொழிற்சாலையையும், அதன் பணிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.




