ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர். வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என பல பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
கொரோனா முதல் அலையின்போது அரசு அலுவலர்களின் மன உளைச்சலை போக்க அரசு அலுவலகங்களுக்கும், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், கொரோனா சிகிச்சை வார்டுகளுக்கும் சென்று அவர்கள் முன்னால் காமெடியாக பேசி மகிழ்ச்சிபடுத்தி வந்தார். தற்போது இரண்டாவது அலையிலும் அந்த பணியை சுதந்திர தினத்தன்று தொடங்கி இருந்கிறார். இந்த முறை சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்கள், சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த பணியை முன்னெடுத்து செல்ல இருக்கிறார்.
முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.