லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
யு டியுப் வீடியோ தளங்கள் வந்த பிறகு மக்கள் டிவிக்களில் பாடல்களை அதிகம் பார்ப்பதை விட தாங்கள் விரும்பும் நேரத்தில் யு டியூபிலேயே பாடல்களைப் பார்த்துவிடுகிறார்கள். அதனால், பல பாடல்கள் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டு அதைப் பார்க்கும் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
தமிழ் சினிமா பாடல்களில் 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் 1150 மில்லியன் பார்வைகளை விரைவில் தொட உள்ளது. அந்தப் பாடலைப் போல வேறு எந்த ஒரு பாடலும் 1000 மில்லியன் பார்வைகளைத் தொடவில்லை.
100 மில்லியன் பார்வைகள் என்பதுதான் ஒரு இலக்காக யு டியுபில் இருக்கிறது. அந்த விதத்தில் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அதில், புதிதாக விஜய்யின் 'தெறி' படப் பாடலான 'ஈனா மீனா டீக்கா' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. யு டியூவில் 100 மில்லியனைக் கடந்துள்ள விஜய்யின் 6வது பாடல் இது.
இதற்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' வீடியோ பாடல், 'மெர்சல்' படத்தின் 'ஆளப்போறான் தமிழன்', 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' லிரிக் வீடியோ, 'பிகில்' படத்தின் 'வெறித்தனம்', 'தெறி' படத்தின் 'என் ஜீவன்' ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.
'தெறி' படத்தின் இரண்டு பாடல்கள் 100 மில்லியனைக் கடந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அட்லி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில் விஜய், எமி ஜாக்சன், சமந்தா மற்றும் பலர் நடித்த இப்படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது.