லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஏப்., 22ல் திருமணம் செய்ய இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால். தற்போது எப்.ஐ.ஆர்., மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான நட்ராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்த விஷ்ணு விஷால், 2018ல் விவாகரத்து பெற்று அவரை பிரந்தார். இதன்பின் பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமானார் விஷ்ணு விஷால். இருவரும் நெருக்கமான இருக்கும் போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். ஆனால் தங்களது காதலை வெளிப்படுத்தாமல் இருந்தனர். சமீபத்தில் விஷ்ணு விஷாலின் காடன் படம் வெளியானது. இது தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது தான் ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்யபோவதாக அறிவித்தார் விஷ்ணு.
இந்நிலையில் வரும் ஏப்., 22ல் இவர்களது திருமணம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக விஷ்ணு - ஜுவாலா வெளியிட்ட அறிக்கையில், ‛‛எங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஏப்., 22ல் நாங்கள் திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இவ்வளவுகாலம் எங்கள் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு நன்றி'' என தெரிவித்துள்ளனர்.
ஜுவாலா கட்டாவும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தான். சக பாட்மின்டன் வீரர் சேட்டன் ஆனந்த்தை 2005ல் திருமணம் செய்தார். பின் 2011ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.