புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்த கேஜிஎப் படம் 2018 டிசம்பரில் திரைக்கு வந்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று டப் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை புரிந்தது. அதனால் மீண்டும் யாஷ்-பிரசாந்த் நீல் கூட்டணி கேஜிஎப் சாப்டர்-2 படத்திலும் இணைந்தது. இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 20ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு,2021 ஜூலை 16-ந்தேதி வெளியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் யாஷ் வெளியிட்ட ஒரு டுவீட்டில் ஜூலை 16-ந்தேதி உங்கள் சீட் பெல்ட்டை நன்றாக போட்டுக் கொள்ள தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு டுவீட் போட, அது ரசிகர்களிடம் ஏராளமான லைக்ஸ் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் யாஷின் ரசிகர் ஒருவர், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கேஜிஎப் -2 படம் வெளியாகும் வருகிற ஜூலை 16-ந்தேதியில் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதனால் அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு இது ஒரு படம் மட்டுமின்றி எங்களது எமோஷன். எங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த ரசிகர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாஷ் ரசிகரின் இந்த கடிதமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.