உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்' | 'பிளடி பாலிடிக்சில்' வெல்வாரா அஞ்சனா நேத்ரன் | பிளாஷ்பேக் : நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மனோரமா | பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகை | 20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின் | ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் | அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' |

தெலுங்கு சினிமாவின் அதிரடி நடிகரான டாக்டர் ராஜசேகர், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டுவந்துவிட்ட அவர், புதிய படங்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ராஜசேகர்.
கணவரின் உடல்நலத்தையும் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப்படத்தை அவரது மனைவி ஜீவிதாவே டைரக்ட் செய்ய இருக்கிறாராம். ஏற்கனவே ராஜசேகரை வைத்து சேஷு, சத்யமேவ ஜெயதே உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார் ஜீவிதா. அதேசமயம் இவை அனைத்து வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.




