பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா | அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் | இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்? | மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா |

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் 'சர்வர் சுந்தரம்'. இப்படம் முடிவடைந்து கடந்த 2017ம் வருடம் செப்டம்பர் மாதேமே வெளியாக வேண்டியது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கு முன்பு சில முறை படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து அதன்பின் படம் வெளிவராமல் நின்று போனது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கடைசியாக அறிவித்தார்கள். அப்போது சந்தானம் நாயகனாக நடித்த மற்றொரு படமான 'டகால்டி' படத்தை வெளியிட வைத்து இந்தப் படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
பின்னர், கொரானோ தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் வெளியாகவில்லை. தற்போது அடுத்த மாதம் படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த முறையாவது தள்ளிப் போகாமல் வெளியாகி ரசிகர்களுக்கு இந்த 'சர்வர் சுந்தரம்' பரிமாற வரட்டும்.




