ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

நாவலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கார் அங்காடியை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிருபர் ஒருவர், துக்ளக் தர்பார் படத்தில் அரசியல் நெடி அதிகமாக இருக்கிறதே என கேள்வி கேட்டார். அதற்கு அவர், “இனிமேல் கதையை சொல்லிவிட்டு தான் படம் எடுக்க வேண்டும் போல் தெரிகிறது. படம் வந்தால் தானே அது எப்படிப்பட்ட படம் என தெரியும். பிரச்சனை செய்வதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்களை மகிழ்விக்க தான் படம் எடுக்கிறோம். எந்த சர்ச்சைகளும் எங்களுக்கு தேவையில்லாத வேலை. பிரச்னை செய்யவும் நேரம் இல்லை" என்று கூறியுள்ளார்




