பெத்தி ரிலீஸ் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | பெத்தி : மகன் ராம்சரண் பற்றி பெருமைப்படும் அப்பா சிரஞ்சீவி | முதல்வர் விஜயை சந்தித்து பார்த்திபன் வைத்த கோரிக்கை | எஸ்.பி.பி பிறந்தநாள்: இளையராஜா, கமல் வாழ்த்து | கயாடு லோஹரை வியந்த மாரி செல்வராஜ்! | இயக்குனர் ஆக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்! | ஹிந்தி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்! | என்றும் பதினாறாக ஒலித்த கந்தர்வக் குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியம் | நல்ல கதைக்காக காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் | உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்' |

தக் லைப் தோல்விக்கு பின் படம் இயக்காமல் இருக்கிறார் மணிரத்னம். மீண்டும் அவர் சிம்புவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. அது நடக்கவில்லை. பைசன் வெற்றிக்குபின் ஸ்டார் ஆன விக்ரம் மகன் துருவ்வை ஹீரோவாக வைத்து ஒரு யூத்புல் சப்ஜெக்ட் எடுக்கப்போகிறார் என்று பேச்சு எழுந்தது. இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
கார்த்திக் மகன் கவுதமை வைத்து கடல் எடுத்தார். மம்முட்டி மகன் துல்கரை வைத்து ஓ காதல் கண்மணி எடுத்தார். பொன்னியின் செல்வனில் பிரபு மகன் விக்ரம்பிரபு நடித்தார். இப்படி தனது படத்தில் பணியாற்றிய ஹீரோக்களின் வாரிசுகளை தனது படத்தில் நடிக்க வைப்பது மணிரத்னத்துக்கு பிடிக்கும். அந்தவகையில் ராவணன், பொன்னியின் செல்வனில் தன்னுடைய பணியாற்றி விக்ரம் மகனை அடுத்த படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்றார்கள்.
இதற்கிடையே, விஜய்சேதுபதியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறார் என்று புது தகவலும் கசிய, மணிரத்னம் அடுத்த பட ஹீரோ துருவ்வா? விஜய்சேதுபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக மணிரத்னம் இயக்கும் படங்களை அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அல்லது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார். அந்த படங்களில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் சம்பளம் மிகக்குறைவாக இருக்கும். ஆனாலும் மணிரத்னம் படம் என்பதால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் பலர் நடிப்பார்கள்.




