டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று நேற்று வெளியானது. கூட்டத்தினருக்கு மத்தியில் விஜய் நின்று கொண்டிருக்க அவர் மீது சிலர் கை வைத்திருக்கும் டிசைன் ஆக அந்த போஸ்டர் இருந்தது. அந்த போஸ்டர் குறித்து 'காப்பி' சர்ச்சை உடனடியாக வெளியானது.
2016ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'பேட்மேன் Vs சூப்பர்மேன் - டான் ஆப் ஜஸ்டிஸ்' படத்தின் போஸ்டர் ஒன்றிலிருந்து 'ஜனநாயகன்' பட போஸ்டரைக் காப்பியடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
இன்றைய ஓடிடி, ஏஐ யுகத்தில் எந்த போஸ்டரை, எந்தக் கதையை, எந்தப் பாடலை எங்கிருந்து 'சுட்டார்கள்' என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அப்படியிருக்கும் போது விஜய் போன்ற டாப் நடிகர் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரை இப்படி காப்பியடித்திருப்பது மீண்டும் 'காப்பி' சர்ச்சை உருவாகக் காரணமாகிவிட்டது.
இனி வெளியாக உள்ள போஸ்டர்களிலாவது இயக்குனர் எச் வினோத் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.