டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஹாலிவுட்டில் வெளியான 'சைனா டவுன்', 'கோஸ் ஆப் மிஸிஸிப்பி', 'பிரைமரி கலர்ஸ்', '28 டேஸ்', உள்பட 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் டயான் லாட்.
'ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்', 'வைல்ட் அட் ஹார்ட்', 'ராம்ப்ளிங் ரோஸ்' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். 'ஒயிட் லைட்னிங்', 'வைல்ட் அட் ஹார்ட்', 'சிட்டிசன் ரூத்', 'டாடி அண்ட் தெம்' போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர்.
1950 முதல் நடித்து வந்த டயான் லாட் வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். 89 வயதான டயான் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். இதை அவர் மகள் லாரா டெர்ன் உறுதிப்படுத்தி, அஞ்சலியையும் வெளியிட்டுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.