டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தொலைக்காட்சியில் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியை இயக்கி வந்த சிவநேசன் சினிமா இயக்குனராகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை, பரத் நடித்த 'காளிதாஸ்' படத்தை தயாரித்த இன்கிரடிபிள் புரொடக்ஷன் தயாரிக்கிறது. கிஷோர், சார்லி, சாருகேஷ் , வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் சிவநேசன் கூறுகையில் “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான கதை, திறமையான நடிகர்கள், திறம்பட பணிபுரியும் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகும் இந்த படம், திரைத்துறையில் புதிய அணுகுமுறையாக அமையும்" என்றார்.