மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருப்பவர் கவின். டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். 'நட்புனா என்னன்னு தெரியுமா' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானாலும், 2023ல் தியேட்டர்களில் வெளியான 'டாடா' படம் வெற்றியாக அமைந்து அவருக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தது. அதற்கு முன்பு ஓடிடியில் வெளியான 'லிப்ட்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
'டாடா' பிறகு வெளியான 'ஸ்டார்' சுமாரான வெற்றியாகவும், அடுத்து வந்த 'பிளடி பெக்கர்', சமீபத்தில் வந்த 'கிஸ்' தோல்விப் படங்களாகவும் அமைந்தன. 'கிஸ்' தோல்வியை சரிக்கட்ட அவர் தற்போது நடித்து வரும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் 'மாஸ்க்' படத்தின் 'கண்ணுமொழி' என்ற பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. அடுத்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடிக்கும் படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.




