
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில்
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை சந்தித்துள்ளீர்களா? என்று இவானாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் : ‛‛அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை சினிமா வட்டாரங்களில் அதிகமாக இருப்பதாக பலர் கூறியிருக்கிறார்கள். என்றாலும் நான் இதுவரை அதுபோன்ற பிரச்னைகளை சந்தித்ததில்லை. முக்கியமாக நான் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்போது எப்போதுமே எனது அம்மா கூடவே வருவார். அதுபோன்று எனது உறவினர் ஒருவரும் எனக்கு பாதுகாப்பாக இருக்கிறார். இப்படி நான் பாதுகாப்போடு செல்வதினால்தானோ என்னவோ இதுவரை யாரும் என்னிடத்தில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்கவில்லை என்று நினைக்கிறேன்"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!