வருங்கால சினிமா இப்படிதான்: சீனாவில் வந்த மாற்றம் | ஓடிடியில் வந்த பிறகு இன்னும் பாராட்டு பெறும் 'சிறை' மற்றும் விக்ரம் பிரபு | இனி பாட மாட்டேன் : பிரபல பாடகர் அரிஜித் சிங் திடீர் அறிவிப்பு | ரீல்ஸ்களில் சாதனை படைத்த 'அல்லு அர்ஜுன் 23' | 'வா வாத்தியார்' இரண்டே வாரங்களில் ஓடிடி ரிலீஸ், ஏன் ? | முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா | மவுன படமான “காந்தி டாக்ஸ்” டிரைலர் வெளியீடு | சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடு | ரீ ரிலீசில் வசூல் சாதனை செய்த அஜித்தின் மங்காத்தா | தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். இவற்றில் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத்.
இந்நிலையில் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆன வரிசையில் இயக்குனர் வினோத்தும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான ராஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.




