சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட இரண்டு படங்களின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது பிரபாஸ் ஜோடியாக ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் கூட இவரது தந்தையான ஒளிப்பதிவாளர் மோகனன் பாலிவுட் படங்களில் நிறைய பணியாற்றியதால் இவரது பள்ளி மற்றும் கல்லூரி காலம் எல்லாமே மும்பையில் தான் கழிந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படி மும்பை கல்லூரி நாட்களில் நடந்த ஒரு அதிர்ச்சி தரத்தக்க நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒருநாள் நானும் எனது எனது தோழிகளும் கல்லூரியில் இருந்து மின்சார ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது இரவு 7 மணி இருக்கும். பர்ஸ்ட் கிளாஸ் என்பதால் அந்த கம்பார்ட்மெண்டில் எங்கள் மூவரை தவிர யாரும் இல்லை. அதனால் ஜன்னல் கம்பியில் முகத்தை வைத்தபடி நான் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன். ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது திடீரென என் முன்னாள் தோன்றிய ஒரு மர்ம நபர் என் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்து ஒரு முத்தம் கொடு என்று கேட்டான். இந்த எதிர்பாராத நிகழ்வால் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
மேலும் அந்த கம்பார்ட்மெண்டில் நாங்கள் மூன்று பேர் மட்டும் தான் என்பதால் ஒருவேளை திடீரென அவன் உள்ளே ஏறி விட்டால் என்ன செய்வது என்றும் திகைத்துப் போய் விட்டேன். அந்த வயதில் இந்த நிகழ்வுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது கூட உடனடியாக தோன்றவில்லை. நல்ல வேளையாக ரயில் அங்கிருந்து கிளம்பி விட்டதால் தப்பித்தோம். இருந்தாலும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை. இப்போது மும்பை பாதுகாப்பான நகரம் என சொன்னாலும் நான் அங்கே படித்த காலங்களில் அப்படி இருந்ததில்லை.. பயத்துடனே தான் பேச்சிலும் ரயிலிலும் பயணித்தோம்” என்று கூறியுள்ளார்.