என்றும் பதினாறாக ஒலித்த கந்தர்வக் குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியம் | நல்ல கதைக்காக காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் | உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்' | 'பிளடி பாலிடிக்சில்' வெல்வாரா அஞ்சனா நேத்ரன் | பிளாஷ்பேக் : நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மனோரமா | பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகை | 20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின் | ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் | அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூலி'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு 2023ம் வருடம் வெளிவந்து, படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒரு வீடியோவுடன் வெளியானது. கடந்த வருடம் ஜுலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாகப் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஐதராபாத், விசாகப்பட்டிணம், ஜெய்ப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சுமார் 9 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார்கள். இப்படத்தில் ஹிந்தி நடிகர் ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.
2025ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.




