''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து | சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. .. | மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா | 'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! |

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர், நடிகர் என தனது முதல் படமான 'புதிய பாதை' படத்திலிருந்தே பேசப்பட்டு வருபவர் பார்த்திபன். அவரது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்கள். அதன்பின் ராக்கி என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். 1990ல் திருமணம் செய்து கொண்டவர்கள் 2001ம் ஆண்டு பிரிந்தனர். அவர்களது விவகாரத்து அப்போது திரையுலகத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பல வருடங்களாகவே தனியாக வசித்து வருகிறார் பார்த்திபன்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக நேற்றிரவு அறிவித்தார்கள். 29 வருட வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் பிரிவது திரையுலகிலும் ரசிகர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் 'பிரிவு' என்ற தலைப்பில் இன்று காலையிலேயே சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் பார்த்திபன். திரையுலகத்திலிருந்து வந்த முதல் ஆறுதல் பதிவாக அது இருக்கிறது.
“பிரிவு:
இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே…
'குடைக்குள் மழை' நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது.
பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல ,
புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப்பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே,
ஊர் விலகி 'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்''.
என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.