சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார் | ஜனநாயகன் ரிலீஸ் தேதி இதுவா? புதிதாக கிளம்பியிருக்கும் தகவல் | சினிமாவில் 25வது ஆண்டில் நுழையப் போகும் தனுஷ் | மீண்டும் தடுமாறும் தியேட்டர்கள் | முதல் வாரத்தில் 60 கோடி வசூலித்த 'ராஜா சிவாஜி' | விஜய்க்கு ஆதரவாக செய்தியைப் பகிர்ந்த ஸ்ரேயா | இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2' | சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள படம் 'தி கோட்'. இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிட்டது.
“எல்லா காலத்திலும் சிறந்தது… கடைசி சவுண்ட் மிக்சிங் முடிந்தது… நன்றி..” எனக் குறிப்பிட்டு அதற்காக பணி செய்த தனது தம்பி பிரேம்ஜி, உதவி இயக்குனர், சவுண்ட் மிக்சிங் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.
'தி கோட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காதது மட்டும்தான் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குறையாக உள்ளது. மற்றபடி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. வெளியீட்டிற்கு முன்பாக கடைசி கொண்டாட்டமாக நாளை ஆகஸ்ட் 31ம் தேதி, இசையமைப்பாளர் யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் நான்காவது சிங்கிள் வெளியாக உள்ளது.