நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் அவரது திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னையால் அவரின் சினிமா பயணமும் டல்லானது. தற்போது ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த அந்தாதூன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்திருக்கிறார் பிரசாந்த். அவரது தந்தையான நடிகர் தியாகராஜன் இயக்கியிருக்கும் இதில் பிரசாந்த் உடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை ஆகஸ்டு 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது ஒருவாரம் முன்பாகவே ஆகஸ்ட் 9ம் தேதியே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிர மடைந்திருக்கிறார் பிரசாந்த். அவர் கலந்து கொண்ட ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் அவரது இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, என்னுடைய திருமணம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அதற்கு நான் ஓகே சொல்லிவிட்டேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளும்படியான பெண் கிடைக்கும் போது எனது திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.