Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் அரசியலுக்கு வந்ததால் என் கனவு நொறுங்கியது ; விஷால் வருத்தம்

21 ஏப், 2024 - 12:41 IST
எழுத்தின் அளவு:
My-dream-was-shattered-because-Vijay-entered-politics;-Vishal-is-sad


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வரும் வரிசையில் சமீபத்தில் நடிகர் விஜய்யும் இணைந்து தனது அரசியல் கட்சியின் பெயரையும் அறிவித்துவிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தையும் அதன் பிறகு இன்னொரு படத்தையும் முடித்துவிட்டு 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தும் விட்டார். அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற யூகங்கள் பலவாறாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் நடிகர் விஷாலும் வரும் 2026ல் தானும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் விஜய் அரசியலில் இறங்கியதால் தான் நீங்களும் அரசியலில் இறங்குகிறீர்களா என்று அவரிடம் சமீபத்தில் ரத்னம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஷால், “அப்படி இல்லை.. விஜய்யை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலுக்கு வர இருப்பதால் என்னுடைய கனவு நிறைவேறாமல் போகிறதே என்கிற வருத்தம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமண நாளில் செல்பி பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்திருமண நாளில் செல்பி பகிர்ந்த ... மீண்டும் ஜோடியாகும் சிம்பு, திரிஷா! மீண்டும் ஜோடியாகும் சிம்பு, திரிஷா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)