பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் ராஷ்மிகா மந்தனாவை தேடி பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் பொறுமையாக செலெக்ட்டிவாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. அந்த வகையில் தற்போது தெலுங்கில் புஷ்பா-2வில் நடித்து வரும் ராஷ்மிகா, சேகர் கம்முலா டைரக்சனில் உருவாகி வரும் 'குபேரா' படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்
இதை அடுத்து தெலுங்கு இயக்குனரும் பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இயக்க உள்ள 'தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை உருவாக்கியுள்ளார் ராகுல் ரவீந்திரன். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசருக்கு அனைத்து மொழிகளிலும் ராஷ்மிகா தான் டப்பிங் பேசியுள்ளார். வரும் ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது
இதில் இன்னும் தான் பணியாற்றாத மலையாள மொழி டீசருக்கும் ராஷ்மிகாவே டப்பிங் கொடுத்துள்ளார். என்றாலும் படம் மலையாளத்தில் வெளியாகும்போது அவர் டப்பிங் பேசப்போவதில்லை என்றும் ராகுல் ரவீந்திரன் கூறியிருக்கிறார்.. வித்தியாசமான காதல் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகன், மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.