திருமணத்திற்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா | கிங் படத்தை அடுத்து ரொமான்டிக் காதல் கதையில் நடிக்கும் ஷாருக்கான் | தேர்தல் முடிவுக்கு பிறகு துவங்கும் கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு! | மூன்று வேடங்களில் லெஜண்ட் சரவணன்! | தங்க கோவிலுக்கு சென்ற ஹன்சிகா | விஜய்யை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் வினோத் | அரசன் படத்தில் பிரியங்கா மோகன்? | கருப்பு படத்தின் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு | இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளோம் : அக்ஷய் குமார் | மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி |

கமல் தயாரித்துள்ள இனிமேல் என்ற இசை ஆல்பம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. நேற்று இந்த ஆல்பத்தின் டீசர் வெளியானது. அதில், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்தனர். இந்த ஆல்பத்துக்கான பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். ஸ்ருதி இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசர் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ரம் படம் நடிகையான காயத்ரி, லோகேஷ் கனகராஜை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதில், உங்கள் படத்தில் ரொமான்ஸ் பண்ணினால் தலையை வெட்டுவீங்க. நீங்க மட்டும் இப்படி என்ன லோகேஷ் இது... என்று அவரை கலாய்த்து ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார் . இந்த படத்தில் அவரது தலையை வெட்டப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.




